லுக்கோஸ்..

லுக்கோஸ்…
அந்த ஸ்காடிஷ் டாக்டர் ஜான் பென்னட், 1845,மார்ச் மாதம் அபூர்வமான வியாதியுடன் கூடிய ஒருவனை சந்திக்கிறார். 28 வயது உடைய தொழிலாளியான அவனுக்கு கல்லீரல் வீக்கம் கண்டிருக்கிறது. அவன் ஒரு கறுப்பன். இப்படித்தான் அவனை அவர் குறிப்பிடுகிறார். இருபது மாதத்திற்கு முன் அவனை பரிசோதிக்கும் போது இருந்ததை விட அந்த வீக்கம் மிகவும் பெருகி ஒரு கட்டியாக அவன் வயிற்றில் நிலை கொண்டுள்ளது. அது தன் உச்சக் கட்டத்தை நெருங்கி, நிலை கொண்டு விட்டதாக அவர் கருதுகிறார். இனி அந்தக் கட்டி தனது தொல்லைகளை தீவிரமாக கொடுக்க ஆரம்பிக்கும்.
அடுத்த ஆறு மாதத்தில் படிபடியாக விளைவுகள் தெரிய ஆரம்பிக்கின்றன. முதலில் காய்ச்சல், ஆங்காங்கே ரத்த வெடிப்புகள், திடீர் வயிற்று வலிகள் என ஆரம்பித்து இறுக்கமாக ஆனால் வேகமாக ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தாக்க ஆரம்பிக்கிறது. முடியுறா ரண வேதனை அவனை ஆட்கொள்கிறது.
சில வாரங்களுக்கு பிறகு நடந்த அவனது பிண பரிசோதனையில்தான் டாக்டர் பென்னட், அவனது வியாதியின் விளைவுகளுக்கு பின் இருந்த காரணத்தை கண்டு பிடிக்கிறார். அவனது இரத்தம் முழுவது ம் வெள்ளை ரத்த அணுக்களினால் மட்டுமே ஆக்கிரமிக்கப் பட்டு இருந்தது. வெள்ளை அணுக்கள் தான் மனித உடலிலுக்கு தேவைப்படும் போது எல்லாம் சீழ் உருவாக்கும் தன்மை கொண்டது. இதுதான், அநேகமாக உலகின் முதல் முறையாக உடலில் உருவாகுவதும் சீழ் , உடலுக்குள்ளே இருக்கும் இரத்த அணுக்களினால் என்பது கண்டறியப்படுகிறது என்று டாக்டர் பென்னட் குறிப்பிடுகிறார்.
அது உண்மையாகவே இருந்திருக்க கூடும் ஒரு வேளை, டாக்டர் பென்னட் அந்த சீழ் உருவாவதின் காரணத்தை கண்டு பிடித்திருப்பானால்! உடல்கூறு பரிசோதனையின் போது, வேறு எங்குமே, காயமோ, கட்டியோ கண்டறியப் படவில்லை. அந்த சீழ் ரத்த வெள்ளை அணுக்களின் ஒன்றின் மீது ஒன்றான அழுத்ததினால் உருவாகியுள்ளதே உண்மையான காரணம். ஏனோ, டாக்டர் பென்னட் அதை குறிப்பிட தவறி விட்டார்.
அதிலிருந்து ஒரு நான்கு மாதத்திற்கு பிறகு, ஜெர்மனியில் டாக்டர் ருடால்ப் விர்ச்சோவ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிடுகிறார். அது, டாக்டர் பென்னட்டின் கேஸைப் போலவே அதே ஒற்றுமையைக் கொண்ட மற்றொறு நோயாளியைப் பற்றியது. அந்த ஐம்பது வயதுடைய சமயல்காரியின் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் எல்லாம் திடீரென அளவுக்கதிகமாக பெருகி ஒரு கட்டியாக கல்லீரலில் சேர்ந்திருந்தது. அவளது உடல்கூறு பரிசோதனையின் போது, மைக்ரோஸ்கோப்பே தேவைப்படாத அளவிற்கு அவள் ரத்தம் வெள்ளை நிறத்தால் நிரம்பியிருந்தது.
டாக்டர் விர்ச்சோவிற்கு, பென்னட்டின் கேஸைப் பற்றித் தெரிந்திருந்தது. அவரால், பென்னட்டின் ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நிறைய கேள்விகளுக்கு, பதிலிட்டு நிரப்ப வேண்டியிருந்தது. எதனால் கல்லீரல் அத்துணை வீக்கம் கண்டிருந்தது? எதனால் கல்லீரலில்? ஏன் உடலில் வேறு எங்கும் ஒரு காயம் கூட ஏற்படவில்லை? அவரால், அனைத்து கேள்விகளுக்கும் ஒருங்கிணைந்த ஒரு பதிலை உருவாக்க முடியவில்லை. சரி! பதில்தான் இல்லை! இந்த வியாதியின் நிலைக்கு ஒரு பெயர் வைக்கலாமே? என்று யோசிக்க ஆரம்பித்தார்.
பல நூறு கோடி வெள்ளை ரத்த அணுக்களினால் வெளிப்படும் வியாதியின் விளைவுகளுக்கு, அவரால், மிக சுலபமாக ஒரு பெயரிட முடிந்தது.
1897ம் ஆண்டு, அவர் அதற்கு, லுக்கேமியா (Leukemia) என்று பெயரிட்டார். லுக்கோஸ் என்றால் கிரேக்க மொழியில் வெள்ளை என்று அர்த்தம். ஒரு நூற்றாண்டுக்கு பிறகு தமிழில் அதை இரத்தப் புற்று நோய் என அழைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *